46. அருள்மிகு சாட்சிநாதர் கோயில்
இறைவன் சாட்சிநாதர்
இறைவி கரும்பன்ன சொல்லியம்மை
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் வன்னி மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருப்புறம்பயம், தமிழ்நாடு

வழிகாட்டி

தற்போது 'திருப்புறம்பியம்' என்று அழைக்கப்படுகிறது.கும்பகோணத்திலிருந்து திருஇன்னம்பர் செல்லும் வழியில் 10 கீ.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் சென்று புளியஞ்சேரி வழியாகச் சென்றால் இக்கோயிலை அடையலாம்.
தலச்சிறப்பு

Thirupurambiyam Gopuram Thirupurambiyam Vinayagarபிரளய காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், இந்த இடத்திற்கு புறத்தே சூழ்ந்திருந்ததால் இத்தலம் 'புறம்பயம்' என்று அழைக்கப்பட்டது. பெண் ஒருவருக்கு ஆதரவாக சிவபெருமான் வந்து சாட்சி சொன்னதால் இத்தலத்து மூலவர் 'சாட்சிநாதர்' என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் 'சாட்சிநாதர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'கரும்பன்ன சொல்லியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

Thirupurambiyam Amman Thirupurambiyam Moolavarகருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் உள்ள விநாயகர் 'பிரளயம் காத்த விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இவர் வெள்ளை நிறத்தில் இருக்கின்றார். இவருக்கு விநாயக சதுர்த்தி அன்று நடைபெறும் தேன் அபிஷேகத்தின்போது தேன் வெளிவராது உள்ளேயே சென்றுவிடும். தட்சிணாமூர்த்திக்குரிய 24 முக்கியத் தலங்களுள் இக்கோயிலும் ஒன்று. இங்குதான் சனகாதி முனிவர்களுக்கு தென்முகக் கடவுள் தர்மோபதேசம் செய்தார்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com